Thursday, December 20, 2012

புதிய அதிபர் நியமனம்

திருகோணமலை உவர்மலை விவேகாநந்தா கல்லூரிக்கு புதிய அதிபராக சீவரெத்தினம் மதியழகன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தனது கடமைகளை புதன்கிழமை 19.12.2012 மாலை பொறுப்பேற்றுக் கொண்டார்.
கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ஏ.புஸ்பகுமார வினால் உடனடியாக செயற்படும் வண்ணம் இந்நத நியமனம் வழங்கப்பட்டுள்ளது. சீ,மதியழகன் முன்னர் நிலாவெளி தமிழ் மகா வித்தியாலயத்தில் அதிபராகவும், பின்னர் கிழக்கு மாகாண கல்வி திணைக்கத்தில் ஆரம்ப பிரிவுக்கு பொறுப்பான உதவிக் கல்வி பணிப்பாளராகவும். பின்னர் பெருந்தெரு விக்நேஸ்வரா மகா வித்தியாலயத்தில் அதிபர் இராஜநாதனின் ஓய்வுக்கு பின்னர் அதிபராகவும் கடமையாற்றியவராவார்.
இவரது காலத்தில் பெருந்தெரு விக்நேஸ்வரா மகா வித்தியாலயம் அதீத வளர்ச்சி கண்டுள்ளதுடன், சிறந்த பௌதீக சூழலையும் ஏற்படுத்திக் கொண்டுள்ளது.

No comments:

Post a Comment