Friday, July 5, 2013

மாகாண விளையாட்டு விழா

கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான 18வது மெய்வல்லுநர்  போட்டிகள் சனிக்கிழமை 06.07.2013 காலை 9.00 மணிககு கிழக்கு பல்கலைக்கழக  மைதானத்தில் ஆரம்பித்து வைக்கப்படுகின்றது.  கிழ்க்கு மாகாண கல்வி பண்பாடு காணி போக்குவரத்து அமைச்சின் செயலாளர் ஏ.புஸ்பகுமார் பிரதம அதிதியாக  கலந்து சிறப்பிக்கின்றார். 17 கல்வி வலய்ங்களைச் சேர்ந்த 3600 மாணவர்க் இதில் பங்கேற்கின்றனர்.09.07.2013 செவ்வாய்க்கிழமை மாலை இறுதி நிகழ்வுகள் நடைபெறு்ம்.

கடுங்காற்று

திருகோணமலையில் இன்று மதியம் கடுங்காற்று 20 நிமிடங்கள் வரை  வீசியது. குப்பைகள் விதிகளில் அள்ளுண்டு சென்றதால் போக்குவரத்து இடைஞ்சல்களும் ஏற்பட்டது. முற்றவெளி மைதானத்தில் குவிக்கப்பட்ட மணல்மேடுகளில் இருந்து பெருமளவான புழுதிகளும் வெளிக்கிளம்பியது.
ஸ்ரீ கோணுஸ்வரா இந்துக் கல்லூரி மைதானத்தில் இயேசு சபையினால் நாளை நடைபெற உள்ள ஆராதனைக்கூட்டத்திற்காக  ஏற்படுத்தப்படடி்ருந்த 3 மின்விளக்கு கோபுரங்கள் வீழ்ந்து  நொருங்கின.

Thursday, July 4, 2013

மாகாண மெய்வல்லுநர் போட்டி

கிழக்கு மாகாண18வது மெய்வல்லுநர் போட்டி சனிக்கிழமை 06.07.2013 காலை ஆரம்பித்து வைக்கப்படுகின்றது. கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் எம்.ரீ.ஏ.நிசாம் தலைமையில் உடற்கல்வி உதவிக் கல்வி பணிப்பாளர் ஜெ.உதயரெட்ணம் இதனை நெறிப்படுத்துகின்றார்.

கிராம சேவையாளர் மீது தாக்குதல்

கோணேசபுரி கிராம சேவை அலுவலகர் மீது பிரதேச வாசிகள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம்  இன்று வியாழக்கிழமை 04.07.2103 மதியம் சாம்பல்தீவீல் உள்ளஅலுவலகத்தில் இடம் பெற்றுள்ளது.  திருகோணமலை பொது வைத்தியசாலையில் விபத்து பிரிவில் சிகிற்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். உப்புவெளி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு இருவரைக் கைது செய்துள்ளனர்.

Tuesday, July 2, 2013

162 ஓட்டங்களால் வெற்றி

இலங்கை பாடசாலைகள் கிரிக்கெட் சங்கம் நடத்தும் 15 வயதுக்கு உட்பட்ட பிரிவு III க்கான போட்டியில் திருகோணமலை ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி அணியினர் 162 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளனர்.
செவ்வாய்க்கிழமை  02.07.2013 ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரிக்கும் பதவிய ரக் 1142 வித்தியாலயத்திற்கும் இடையலான 50 பந்து பரிமாற்றம் கொண்ட போட்டி கோணேஸ்வரா இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெறறது.

துண்டிக்கப்பட்ட கை பொருத்தப்பட்டது.

முற்றாக துண்டிக்கப்பட்ட கையினை சத்திரசிகிச்சை மூலம் மீண்டும் பொருத்தி, திருகோணமலை பொது வைத்தியசாலை வைத்தியர்கள் சாதனை படைத்துள்ளனர். இச்சிகிச்சை கடந்த மாதம் 26ஆம் திகதி மேற்கொள்ளப்பட் டுள்ளது.
 
அறுவை சிகிச்சை நிபுணர் ரொகான் சிறினோ தலைமையிலான வைத்தியர் குழுவே மேற்படி சிகிச்சையினை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளனர்.

இதுவரை காலமும் இவ்வாறான சிகிச்சைகள் கண்டி, கொழும்பு போன்ற மருத்துவமனைகளிலேயே மேற்கொள்ளப்பட்டது. திருகோணமலை
வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்கள் இவ்வாறான மருத்துவமனைக்கே அனுப்பப்படுவது வழக்கம். தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலையில் சகல சிகிச்சைகளும் மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Sunday, June 30, 2013

பழைய மாணவர் தினம்

திருகோணமலை இராம கிருஷ்ண சங்கம் ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி பழைய மாணவர் தினம் ஒன்றுகூடல் இன்று ஞாயிற்றுக்கிழமை  30.06.2013 நடைபெற்றது.  கல்லூரி திறந்த வெளி  அரங்கில் இந்நிகழ்வு நடைபெற்றது.  10வது வருடமாக இவ் ஒன்றுகூடல் நடத்தப்பட்டு வருகின்றது

நோமன்ஸ் கழகம் வெற்றி

திருகோணமலை மாவட்ட கிரிக்கெட் சங்கம் நடத்திய  50 பந்து பரிமாற்றம் போட்டியில் சனிக்கிழமை 29.06.2013  நோமன்ஸ் கழகம் ஈச் விளையாட்டுக் கழகத்தை 83 ஓட்டங்களால் வெற்றி கொண்டனர்.

சித்திர கண்காட்சி

திருகோணமலை சிததிர கலைக்கூடத்தின் முதலாவது  சிறுவர் சித்தர கண்காட்சி  உவர்மலை விவேகாநந்தா கல்லூரியில் சனிக்கிழமை காலை நடைபெற்றது. கிழக்கு மாகாண கலாசார பணிப்பாளர் வெலிகல பிரதம அதிதியாகவும், தமிழ் எழுத்தாளர் ஊக்குவிப்பு மையத்தின் பணிப்பாளர் ஓ.கே.குணநாதன் கௌரவ விருந்தினராகவும் கலந்து சிறப்பித்தனர்.




ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி சித்திர பாட ஆசிரியர் அ.அருள்பாஸ்கரனால் இந்த சித்திர கலைக்கூடம் நிர்வகிக்கப்பட்டு வருகின்றது.

பதவி ஏற்பு

திருகோணமலை நியு  செஞ்சுரி லயன்ஸ் கழகத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு நிகழ்வு சனிக்கிழமை 29.06.2013 மாலை நடைபெற்றது. புதிய வருடத்துக்கான தலைவராக மார்ட்டீன் ஜெயக்காந் பதவி எற்றுக் கொண்டார்.